Friday, May 1, 2009

இளைய தமிழகத்தில் இணைய இருபது காரணங்கள்...!

உங்களுக்காக சில கேள்விகள்....! ஒவ்வொன்றிற்கும் ஆம் , இல்லை என்று பதில் சொல்லிக்கொண்டே கீழே வாருங்கள்.1. நீங்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவரா?

2. இன்றைய அரசியல் நிலையின் பால் மீளாத கோபம் கொண்டவரா ?

3. இன்றைய தமிழ்ச் சமூகத்தின் கையறு நிலைக்கு காரணம் சுயநல அரசியல் வாதிகள் தான் காரணம் என்று நம்புபவரா ?

4. எங்கெங்கு காணினும் லஞ்சம் , ஊழல் - இவைகண்டு ஆற்றாமையால் புலம்புவரா ?

5. ஈழத் தமிழர்களின் உயிருக்கும் , உடமைக்கும் தாய்த் தமிழகம் எதுவுமே செய்யவில்லை என்ற ஆதங்கம் உடையவரா ?

6. முத்துக்குமார் தமிழகத்தில் எழுப்பிய தீயை அரசியல் சதிகள் அணைத்துவிட்டன என்று புலம்பித் தீர்த்தவர்களா?

7. பணம் , பதவி இவைகளால் மட்டுமே இன்றைய அரசியல் களம் நிரம்பிக்கிடக்கிறது. அறிவார்ந்த பெரியோர்களுக்கு இங்கே இடமில்லை என்று எண்ணுகிறீர்களா?

8. தமிழகத்திற்கு மாற்றம் ஒரு உடனடித் தேவை என்ற எண்ணம் கொண்டவர்களா ?

9. சினிமா மோகத்தில் சீரழிந்து கிடக்கும் தமிழக இளைஞர்களின் சக்தியை நல்வழிக்கு மாற்றிட விரும்புபவர்களா?

10. அண்டை மாநிலங்கள் கூட தமிழகத்தின் உரிமையை மறுக்கும் ஒரு கேவல சூழல். நமது நியாயமான உரிமைகளை அமைதி வழியில் போராடி பெற்றிட ஆர்வமுள்ளவர்களா ?

11. எங்கேனும் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு , இந்தியாவின் / தமிழகத்தின் நிலை கண்டு பொருமுபுவர்களா ? எதுவுமே செய்ய இயலவில்லை என்று குமுறுபவர்களா?

12. ஏதேனும் சமூகத்துக்கு செய்திட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களா?

13. சாதி , மதம் தாண்டிய சமத்துவ சமுதாயத்தில் அக்கறை கொண்டவர்களா?

14. மூட நம்பிக்கையையும் , முட்டாள்தனங்களையும் தாண்டிய ஒரு ஆரோக்கியமான சமூகத்தை அமைக்க வேண்டும் என்ற அக்கறை உள்ளவர்களா?

15. பணமயம் ஆகிவிட்ட இன்றைய கல்விச்சூழலில் எல்லோருக்கும் உயர்கல்வி சாத்தியமென்ற நிலையை எட்டுவதில் ஆர்வம் கொண்டவர்களா?


16. ஆரோக்கியமான தொழிற் சூழலும் , தொழிற் போட்டியும் கொண்ட தமிழகத்தில் ஆர்வம் கொண்டவர்களா ?

17. அப்படிப்பட்ட ஒரு சூழல் இங்கே இல்லை. எல்லா மட்டங்களிலும் அரசியல் தலை விரித்து ஆடுகிறதே என்ற ஆற்றாத கோபம் கொண்டவரா ?

18. நாடு சுதந்திரம் பெற்று ஆயின ஆண்டுகள் அறுபது. ஆனாலும் நடைபாதையோரம் தான் நாட்டின் 20 சதவீத மக்கள் குடி கொண்டிருக்கின்றனர். ஏன் இந்த அவல நிலை என்று எப்போதாவது எண்ணியிருக்கிறீர்களா?

19. எப்போதும் முன்னேற்றம் , முன்னேற்றம் என்று வானாளாவிய கட்டிடங்களைக் கண்டு பெருமைப் படும் கார்ப்பரேட் கனவான்கள் நாட்டில் ஒரீரு சதவீதம் தான். மீதமுள்ள தொண்ணூறு சதம் மக்கள் அன்றாடங்காச்சிகள் தான். ஆனால் இன்றைய நிலவரத்தில் அந்த ஓரிரு சதவீத மக்களுக்காக மீதமுள்ள மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறீர்களா ?


20. எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் உணர்வுள்ள தமிழரா ?
மேற்கண்ட 20 கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்காவது ஆம் என்று பதில் அளித்திருந்தீர்களானால் நீங்கள் மிகச்சரியான இடத்திற்கே வந்திருக்கிறீர்கள்...!!!!!!!!!

உடனே , உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் விடை எம்மிடம் இருக்கிறது என்று சில மூலிகை வைத்தியர்களைப் போல "இளைய தமிழகம்" தவறான நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிக்க வில்லை. நம்மிடம் நமது கேள்விகளுக்குப் பதில் காணும் திறன் இருக்கிறது. நம்மிடம் அந்தக் கேள்விகளில் பொதிந்திருக்கும் மாற்றத்திற்கான ஆதங்கம் நிறைய இருக்கிறது.

நமது கனவுகளை வானில் இருந்து வரும் தேவதூதர்கள் நிறைவேற்றித் தரப் போவதில்லை. நாம்தான் நிறைவேற்ற வேண்டும். அந்தக் கனவுகளை நிறைவேற்றுவதற்கான மிகச்சரியான வாயில் தான் இளைய தமிழகம்.!

சொல்லப்போனால் , இளைய தமிழகத்தின் முக்கியக் குறிக்கோளே மாற்றம் சாத்தியம் என்பதற்கான நம்பிக்கையை இளைஞர்கள் , இளைஞிகள் இவர்களிடம் ஏற்படுத்துவதே.


நம்புங்கள் ,

நம்மால் முடியும் மாற்றத்தை உருவாக்க.!

இணையுங்கள் இளையதமிழகத்தில்.!

நம்மை நம்பி ,

நமது உழைப்பையும் ,

நேர்மையையும் நம்பி!!!இவண்
இளைய தமிழகம்.
உணர்வுள்ள தமிழ் இளைஞர்களின் இரண்டாவது சுதந்திரப் போர்.!

7 comments:

Irai Adimai May 2, 2009 at 2:24 PM  

மேலதிக விபரங்கள் தேவைப் படுகிறது.உங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கம் வேண்டும்.இன்றைய சமூக அக்கறை கொண்ட இளைஞனின் உள்ளக் குமுறலை கேள்வியாக்கி இருக்கிறீர்கள்.நல்லமுயற்சி.வெற்றியடைய வாழ்த்துக்கள்.இணைத்துக் கொள்வதில் அக்கறை கொள்கிறேன்.வழிமுறை கூறுங்கள்.

இளைய தமிழகம் May 2, 2009 at 6:44 PM  

நன்றிகள் நண்பரே.

உங்கள் மேலான ஆதரவு கண்டிப்பாக நமது முயற்சியை வலுவாக்கும்.

ஒரு மின்னஞ்சல் அனுப்புங்களேன். முழு விபரமும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப் படும்.

எமது மின்னஞ்சல் முகவரி

ilayatn@gmail.com

நன்றி

மின்னஞ்சலில் சந்திப்போம்.

இவண்
இளைய தமிழகம்

Anoch June 22, 2009 at 10:54 PM  

Hi Nice blog,Very interesting post.keep it up.I am giving some adsense tips here,just read them up as well.
Online Free Videos, NET WORKING,Google Adsense System

Bogy.in March 7, 2010 at 6:13 PM  

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in April 14, 2010 at 9:13 PM  

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

மாலதி February 19, 2012 at 10:43 AM  

வணக்கம் சில மூலிகை வைத்தியர்கலைபோல் என்ற சொல்லாடலை கண்டிப்பாக தவிக்க வேண்டுகிறேன் . சமூகம் உண்மையை ஏற்பதில்லை என்பது எமக்கும் தெரியும் உமக்கும் புரியும் . எமது இடுகைக்கு வாருங்கள் எல்லா ஆக்கங்களையும் வாசியுங்கள் பின்னர் உங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி .....

Ramesh Ramar June 7, 2018 at 1:02 PM  

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper

மாற்றம் சாத்தியம்தானா?

மாற்றம் சாத்தியம்தானா?
ஒபாமா என்ற தனிநபரால் முடிந்தது மாபெரும் இளைஞர் பட்டாளத்தால் முடியாதா என்ன??

இளைய தமிழகத்திற்கான உந்துசக்தி

மிக நீண்டநாட்களாகவே இளைஞர்கள் தமிழக அரசியலை விட்டுத் தள்ளிப் போய்விட்டார்கள். பண முதலைகள் தங்களது அதிகாரப் பசிக்காக விளையாடும் மைதானமாகவும் , சம்பாதிப்பதையே நோக்கமாகவும் கொண்ட அரசியல்வாதிகளின் களமாகவும் , பதவி , பணம் இவற்றைத் தேடுவதற்கு எவ்வித தகுதியுமில்லாதவர்களாலும் நீரம்பிக் கிடக்கிறது நமது அரசியல் சாக்கடை. அந்தச் சாக்கடை எவ்வளவு தூரம் நாறிக் கிடக்கிறது என்பதை சமீபத்திய ஈழ விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் நிகழ்த்திக்காட்டிய சதிராட்டமும் , முத்துக்குமாரனின் பிணத்தின் மீது நடத்திய அரசியலும் நமக்கு தெளிவாகவே உணர்த்துகிறது. இதுவே இத்தகையதொரு அமைப்பினை ஏற்படுத்துவதற்கான உந்துசக்தி.

மானிட சக்தி!

மானிடத் தன்மையைக் கொண்டு - பலர்
வையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு
மானிடத் தன்மையை நம்பி - அதன்
வன்மையி னாற்புவி வாழ்வுகொள் தம்பி!
"மானிடம்" என்றொரு வாளும் - அதை
வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும்
வானும் வசப்பட வைக்கும் - இதில்
வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும்
மானிடத் தன்மையைக் ...

மானிடன் வாழ்ந்த வரைக்கும் - இந்த
வையத்திலே அவன் செய்த வரைக்கும்
மானிடத் தன்மைக்கு வேறாய் - ஒரு
வல்லமை கேட்டிருந்தால் அதைக் கூறாய்!
மானிடம் என்பது புல்லோ? - அன்றி
மரக்கட்டை யைக்குறித் திடவந்த சொல்லோ?
கானிடை வாழ்ந்ததும் உண்டு - பின்பு
கடலை வசப்படச் செய்ததும் அதுதான்!
மானிடத் தன்மையைக் ...

மானிடம் போற்ற மறுக்கும் - ஒரு
மானிடன் தன்னைத்தன் உயிரும் வெறுக்கும்;
மானிடம் என்பது குன்று - தனில்
வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று
மானிடருக் கினி தாக - இங்கு
வாய்த்த பகுத்தறி வாம்விழி யாலே
வான்திசை எங்கணும் நீபார்! - வாழ்வின்
வல்லமை யுமானிடத் தன்மைருஎன் றதேர்!

- பாவேந்தர் பாரதிதாசன்


நீங்கள் இவர்களில் ஒருவரா?

நீங்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவரா?

இன்றைய அரசியல் நிலையின் பால் மீளாத கோபம் கொண்டவரா ?

இன்றைய தமிழ்ச் சமூகத்தின் கையறு நிலைக்கு காரணம் சுயநல அரசியல் வாதிகள் தான் காரணம் என்று நம்புபவரா ?

எங்கெங்கு காணினும் லஞ்சம் , ஊழல் - இவைகண்டு ஆற்றாமையால் புலம்புவரா ?

ஈழத் தமிழர்களின் உயிருக்கும் , உடமைக்கும் தாய்த் தமிழகம் எதுவுமே செய்யவில்லை என்ற ஆதங்கம் உடையவரா ?

முத்துக்குமார் தமிழகத்தில் எழுப்பிய தீயை அரசியல் சதிகள் அணைத்துவிட்டன என்று புலம்பித் தீர்த்தவர்களா?

பணம் , பதவி இவைகளால் மட்டுமே இன்றைய அரசியல் களம் நிரம்பிக்கிடக்கிறது. அறிவார்ந்த பெரியோர்களுக்கு இங்கே இடமில்லை என்று எண்ணுகிறீர்களா?

தமிழகத்திற்கு மாற்றம் ஒரு உடனடித் தேவை என்ற எண்ணம் கொண்டவர்களா ?

சினிமா மோகத்தில் சீரழிந்து கிடக்கும் தமிழக இளைஞர்களின் சக்தியை நல்வழிக்கு மாற்றிட விரும்புபவர்களா?

அண்டை மாநிலங்கள் கூட தமிழகத்தின் உரிமையை மறுக்கும் ஒரு கேவல சூழல். நமது நியாயமான உரிமைகளை அமைதி வழியில் போராடி பெற்றிட ஆர்வமுள்ளவர்களா ?

எங்கேனும் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு , இந்தியாவின் / தமிழகத்தின் நிலை கண்டு பொருமுபுவர்களா ? எதுவுமே செய்ய இயலவில்லை என்று குமுறுபவர்களா?

ஏதேனும் சமூகத்துக்கு செய்திட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களா?

சாதி , மதம் தாண்டிய சமத்துவ சமுதாயத்தில் அக்கறை கொண்டவர்களா?

மூட நம்பிக்கையையும் , முட்டாள்தனங்களையும் தாண்டிய ஒரு ஆரோக்கியமான சமூகத்தை அமைக்க வேண்டும் என்ற அக்கறை உள்ளவர்களா?

பணமயம் ஆகிவிட்ட இன்றைய கல்விச்சூழலில் எல்லோருக்கும் உயர்கல்வி சாத்தியமென்ற நிலையை எட்டுவதில் ஆர்வம் கொண்டவர்களா?


ஆரோக்கியமான தொழிற் சூழலும் , தொழிற் போட்டியும் கொண்ட தமிழகத்தில் ஆர்வம் கொண்டவர்களா ?

எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் உணர்வுள்ள தமிழரா ?


மேற்கண்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்காவது ஆம் என்று பதில் அளித்திருந்தீர்களானால் நீங்கள் மிகச்சரியான இடத்திற்கே வந்திருக்கிறீர்கள்...!!!!!!!!!

நமது கனவுகளை வானில் இருந்து வரும் தேவதூதர்கள் நிறைவேற்றித் தரப் போவதில்லை. நாம்தான் நிறைவேற்ற வேண்டும். அந்தக் கனவுகளை நிறைவேற்றுவதற்கான மிகச்சரியான வாயில் தான் இளைய தமிழகம்.!

நம்புங்கள் ,
நம்மால் முடியும் மாற்றத்தை உருவாக்க.!

இணையுங்கள் இளையதமிழகத்தில்.!

நம்மை நம்பி ,
நமது உழைப்பையும் , நேர்மையையும் நம்பி!!!

இவண்

இளைய தமிழகம்!இளைய தமிழகத்திற்கு உதவுங்கள்...!

இளைய தமிழகத்திற்கு உதவுங்கள்...!
இளைய தமிழகம் அனைவரையும் சென்றடைய உங்கள் வலைப்பூவில் இந்த இணைப்பினைக் கொடுத்து உதவக் கேட்டுக்கொள்கிறோம்.!

வலைப்பூவின் நோக்கம்……!

இன்னமும் கட்சி அரசியலில் ஊறிப்போய் விட்ட பாமர மக்கள் பலர் மாற்றத்திற்கான தேவையை உணர்ந்தவர்களாயில்லை. யார் ஆட்சிக்கு வந்தால் என்ன , நமது நிலை மாறவா போகிறது என்ற அவநம்பிக்கை ஒவ்வொருவர் பேச்சிலும் மிளிர்கிறது. நமது நீண்டகால வாழ்க்கை முறையை தீர்மானிப்பவர்கள் நமது ஆட்சியாளர்கள் என்ற அடிப்படை உண்மையைக் கூட பலர் அறிந்தவர்களாக இல்லை. ஆக , மாற்றத்தை விரும்பும் இளைஞர்களாகிய நாம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு விழிப்புணர்வு பெற்ற மக்களைத் திரட்டவேண்டும். மக்களைத் திரட்ட மாபெரும் மனித சக்தி தேவை. அந்த மனித சக்தியை இணையம் மூலமாகவும் , களப்பணிகள் மூலமாகவும் திரட்டுவதே எங்கள் உடனடி இலக்கு. அந்த இலக்கினை அடைய ஒருவழியாகத் தான் இந்த வலைப்பூ,
வளமான , தன்னிறைவுபெற்ற ,சுயமரியாதையுள்ள , இனவுணர்வு பெற்ற தமிழகத்தை உருவாக்க இணைவோம்! எங்களைத் தொடருங்கள். மாற்றத்திற்கான திறவுகோலை நாம் இணைந்தே வடிவமைப்போம்!

தமிழ் மொழியின் சிறப்பு!

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்§ம், ஒருசொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.


- பாரதியார்.

புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 129)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP