இளைய தமிழகத்தில் இணைய இருபது காரணங்கள்...!
1. நீங்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவரா?
2. இன்றைய அரசியல் நிலையின் பால் மீளாத கோபம் கொண்டவரா ?
3. இன்றைய தமிழ்ச் சமூகத்தின் கையறு நிலைக்கு காரணம் சுயநல அரசியல் வாதிகள் தான் காரணம் என்று நம்புபவரா ?
4. எங்கெங்கு காணினும் லஞ்சம் , ஊழல் - இவைகண்டு ஆற்றாமையால் புலம்புவரா ?
5. ஈழத் தமிழர்களின் உயிருக்கும் , உடமைக்கும் தாய்த் தமிழகம் எதுவுமே செய்யவில்லை என்ற ஆதங்கம் உடையவரா ?
6. முத்துக்குமார் தமிழகத்தில் எழுப்பிய தீயை அரசியல் சதிகள் அணைத்துவிட்டன என்று புலம்பித் தீர்த்தவர்களா?
7. பணம் , பதவி இவைகளால் மட்டுமே இன்றைய அரசியல் களம் நிரம்பிக்கிடக்கிறது. அறிவார்ந்த பெரியோர்களுக்கு இங்கே இடமில்லை என்று எண்ணுகிறீர்களா?
8. தமிழகத்திற்கு மாற்றம் ஒரு உடனடித் தேவை என்ற எண்ணம் கொண்டவர்களா ?
9. சினிமா மோகத்தில் சீரழிந்து கிடக்கும் தமிழக இளைஞர்களின் சக்தியை நல்வழிக்கு மாற்றிட விரும்புபவர்களா?
10. அண்டை மாநிலங்கள் கூட தமிழகத்தின் உரிமையை மறுக்கும் ஒரு கேவல சூழல். நமது நியாயமான உரிமைகளை அமைதி வழியில் போராடி பெற்றிட ஆர்வமுள்ளவர்களா ?
11. எங்கேனும் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு , இந்தியாவின் / தமிழகத்தின் நிலை கண்டு பொருமுபுவர்களா ? எதுவுமே செய்ய இயலவில்லை என்று குமுறுபவர்களா?
12. ஏதேனும் சமூகத்துக்கு செய்திட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களா?
13. சாதி , மதம் தாண்டிய சமத்துவ சமுதாயத்தில் அக்கறை கொண்டவர்களா?
14. மூட நம்பிக்கையையும் , முட்டாள்தனங்களையும் தாண்டிய ஒரு ஆரோக்கியமான சமூகத்தை அமைக்க வேண்டும் என்ற அக்கறை உள்ளவர்களா?
15. பணமயம் ஆகிவிட்ட இன்றைய கல்விச்சூழலில் எல்லோருக்கும் உயர்கல்வி சாத்தியமென்ற நிலையை எட்டுவதில் ஆர்வம் கொண்டவர்களா?
16. ஆரோக்கியமான தொழிற் சூழலும் , தொழிற் போட்டியும் கொண்ட தமிழகத்தில் ஆர்வம் கொண்டவர்களா ?
17. அப்படிப்பட்ட ஒரு சூழல் இங்கே இல்லை. எல்லா மட்டங்களிலும் அரசியல் தலை விரித்து ஆடுகிறதே என்ற ஆற்றாத கோபம் கொண்டவரா ?
18. நாடு சுதந்திரம் பெற்று ஆயின ஆண்டுகள் அறுபது. ஆனாலும் நடைபாதையோரம் தான் நாட்டின் 20 சதவீத மக்கள் குடி கொண்டிருக்கின்றனர். ஏன் இந்த அவல நிலை என்று எப்போதாவது எண்ணியிருக்கிறீர்களா?
19. எப்போதும் முன்னேற்றம் , முன்னேற்றம் என்று வானாளாவிய கட்டிடங்களைக் கண்டு பெருமைப் படும் கார்ப்பரேட் கனவான்கள் நாட்டில் ஒரீரு சதவீதம் தான். மீதமுள்ள தொண்ணூறு சதம் மக்கள் அன்றாடங்காச்சிகள் தான். ஆனால் இன்றைய நிலவரத்தில் அந்த ஓரிரு சதவீத மக்களுக்காக மீதமுள்ள மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறீர்களா ?
20. எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் உணர்வுள்ள தமிழரா ?
மேற்கண்ட 20 கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்காவது ஆம் என்று பதில் அளித்திருந்தீர்களானால் நீங்கள் மிகச்சரியான இடத்திற்கே வந்திருக்கிறீர்கள்...!!!!!!!!!
உடனே , உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் விடை எம்மிடம் இருக்கிறது என்று சில மூலிகை வைத்தியர்களைப் போல "இளைய தமிழகம்" தவறான நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிக்க வில்லை. நம்மிடம் நமது கேள்விகளுக்குப் பதில் காணும் திறன் இருக்கிறது. நம்மிடம் அந்தக் கேள்விகளில் பொதிந்திருக்கும் மாற்றத்திற்கான ஆதங்கம் நிறைய இருக்கிறது.
நமது கனவுகளை வானில் இருந்து வரும் தேவதூதர்கள் நிறைவேற்றித் தரப் போவதில்லை. நாம்தான் நிறைவேற்ற வேண்டும். அந்தக் கனவுகளை நிறைவேற்றுவதற்கான மிகச்சரியான வாயில் தான் இளைய தமிழகம்.!
சொல்லப்போனால் , இளைய தமிழகத்தின் முக்கியக் குறிக்கோளே மாற்றம் சாத்தியம் என்பதற்கான நம்பிக்கையை இளைஞர்கள் , இளைஞிகள் இவர்களிடம் ஏற்படுத்துவதே.
நம்புங்கள் ,
நம்மால் முடியும் மாற்றத்தை உருவாக்க.!
இணையுங்கள் இளையதமிழகத்தில்.!
நம்மை நம்பி ,
நமது உழைப்பையும் ,
நேர்மையையும் நம்பி!!!
இவண்
இளைய தமிழகம்.
உணர்வுள்ள தமிழ் இளைஞர்களின் இரண்டாவது சுதந்திரப் போர்.!